நவீன தையல் தொழிலாளர்கள் சங்கம்

  • English
  • தொலைபேசி: (+91) 93806-01635
  • மின்னஞ்சல்: Mailus@ntta.org.in

நிறுவன கட்டமைப்பு

எங்களின் நிர்வாக மேலாண்மை வரிசைமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஒரு நன்றாக படிநிலை வரையறுக்கப்பட்ட மேலாண்மை உதவியுடன் நிறுவனத்தின் திறன்களை மதிப்பீடு செய்யவும், வணிக நோக்கங்களை அடையவும் , மற்றும் நிறுவன செயல்பாடுகளை வகையறுக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டு பணியிடத்தில் திறம்பட செயல்படுத்த முடியும்.

இது அனைத்து கட்ட உறுப்பினர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு வெளிப்படையான அமைப்பாகும் !!

இந்த நிறுவனத்தின் நிர்வாகமும் மற்றும் கடமைகளையும் நிர்வாகத்தின் தலைவரால் வழிநடத்தப்பட்டு ஆறு வாரிய உறுப்பினர்களால் கல்வித்துறை நிர்வாக பணிகள் நிதி மற்றும் மூலோபாய விவகாரங்களை உள்ளடக்கிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நாங்கள் ஒரு வெற்றிகரமான அமைப்பாக வெளிப்படுவதற்காக இரு ஆலோசகர்கள் எங்களின் நிறுவன அமைப்பு கணக்கியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் வழிநடத்த தங்களின் மூலோபாய மற்றும் தொழில்நுட்ப அனுபவத்தை கொண்டு எங்களை வழி நடத்துகின்றனர். எனவே கீழே குறிப்பிட்டுள்ள நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் இடையே ஒரு நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது.

நிறுவனத்தின் நிர்வாக வரிசைமுறை

ஆசிரியர் கழகஉறுப்பினர்களின் வரிசைமுறை

நிறுவன தலைவர் : திரு. பாலகோபால்

திரு.பாலகோபால் அவர்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மூலோபாய குறிக்கோள்களை முன்னெடுத்து நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை திறம்பட செயலாற்றுவது என்பது முதன்மையான பொறுப்பாகிறது. மேலும் நிறுவனத்தின் மூலோபாய நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை நிர்ணயித்தல் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் நிறைவேற்றுவதற்கான இலக்கினை நோக்கி சரியாக முன்னேறுவதை கண்காணிப்பு செய்தல் ஊழியர்கள் நியமனம் நிறுவனத்தின் செயல்பாட்டு கணக்கியலை உரிய பயனீட்டார்களான மாணவர்கள் வாடிக்கையாளர்கள் ஆலோசகர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கும் தெரிவித்தல் போன்றவை தலைவரின் பணிகளுக்கு உட்பட்டவை.


குழு உறுப்பினர்கள் : திரு.எஸ்.வி.பாபு , திரு.ஆர்.கோதண்டன் , திரு.தே.விஜய ரங்கம் , திரு.ராஜகோபால் , திரு.சி.சேகர் , திரு.குப்புசாமி .

திரு.எஸ்.வி.பாபு , திரு.ஆர்.கோதண்டன் , திரு.தே.விஜய ரங்கம் , திரு.ராஜகோபால் , திரு.சி.சேகர் மற்றும் திரு.குப்புசாமி ஆகியோரை உள்ளடக்கிய குழு மூலோபாயத்தை வரையறுப்பது அல்லது வழிநடத்துதலை வரையறுப்பது மேலும் மூலோபாயத்தின் செயல்முறை திட்டத்தினை நிறைவேற்ற நிதி ஒதுக்கிக் கொள்வதற்கான முடிவுகளை எடுப்பதற்கும் எமது நிறுவனத்தின் செயல்முறையின் ஒட்டுமொத்த திட்ட அடிப்படையினையும் உருவாக்குகிறது. இந்தக் குழு மேலும் மாணவர்களின் விசாரிப்புக்களையும் மாணவர் சேர்க்கையினையும் மற்றும் விரிவான தையற்பயிற்சிக்குரிய மென்பொருள் திறன்களை பயிற்றுவித்தல் வலுவான தகவல் தொடர்புதிறனை மேம்படுத்தல் சங்க வளாகத்தை பராமரித்தல் பழுது பார்க்கும் பணிகளை செய்தல் சுத்தமாக வைத்திருக்க ஆட்களை ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட செய்தல் போன்ற பல்வேறு பணிகளை முன்னெடுத்து செயலாற்றுதலும்ää இவை எல்லாம் எங்கள் நிர்வாக ஊழியர்களால் கண்காணிக்கப்படும்.


ஊழியர்கள்: 150