நவீன தையல் தொழிலாளர்கள் சங்கம்

 • English
 • தொலைபேசி: (+91) 93806-01635
 • மின்னஞ்சல்: Mailus@ntta.org.in

வெற்றி பயணம்

 • ATA 1999லிருந்து இயங்கி வரும் ஒரு பெரிய அமைப்பாகும். அவர்களும் எங்களுடன் கைகோர்க்க இருப்பதால் அவர்களின் அனுபவ வழிகாட்டல் எங்களை மேலும் மெருக்கேற்றும்
 • இதுவரை நாங்கள் 1000 தையற்கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருதல் அல்லது தொழில் தொடங்க உதவிகள் செய்து தந்துள்ளோம்.
 • 20 தையற்கலைஞர்கள் வெளிநாட்டிற்கு எங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளனர்.
 • NTTA- விற்கான கட்டிடம் : எங்களின் கட்டிட வடிவமைப்பாளர்கள் திருமண மண்டபம் அலுவலகம் பயிற்சி கூடம் கோவில் போன்ற கட்டிட பணிகளுக்கு தேவையான திட்ட வடிவமைப்பை தயாராக வைத்துள்ளனர்.
 • இந்த தையற்கலைஞர் குடியிருப்பில் 106 தையற்கலைஞர்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட வெளி ஆட்கள் தடை செய்யப்பட்ட சமூக வளாகம் அமைக்கப்படும்.
 • தையற்கலைஞர்களுக்கென பிரத்யேகமான குடியிருப்பு அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுவே முதல் முறை.
 • தனிப்பட்ட தையற்கலைஞர்கள் எங்களுக்கு சேவையாகவோ நிதி உதவிகள் அளித்தோ ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.
 • சில தனியார் நிறுவனங்களும் எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
 • எங்களின் முயற்சிகளில் பங்களிக்கவும் எங்களுக்கு உதவுவதற்காகவும் விற்பனையாளர்கள் பலர் தயாராக உள்ளனர். பல மாணவர்கள் எங்களின் பல்வேறு பாடதிட்டங்களில் சேர்வதற்கு தங்களின் விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.
 • நாங்கள் மின் மற்றும் தண்ணீர் இணைப்பினை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்..
 • தண்ணீருக்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி சிறப்பாக முடிந்தது.
 • தற்போது மேலும் நிதி உதவிபெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். இந்த நிதி எங்களின் கட்டுமான பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும். இதனால் கட்டிடம் எழுப்பும் பணி மேலும் துரிதப்படுத்தப்படும்.