நவீன தையல் தொழிலாளர்கள் சங்கம்

 • English
 • தொலைபேசி: (+91) 93806-01635
 • மின்னஞ்சல்: Mailus@ntta.org.in

செயல் திட்டங்கள்

செயல் திட்டங்கள்

திட்டங்களை வரையறுத்தல் கட்டிட நிர்மாணம் கற்பித்தல் மற்றும் பாடத்திட்டத்தை வடிவமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் துரிதப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

NTTA - என்.டி.டி.ஏ அமைப்பை ஒரு இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாக உருவாக்குதல் :

எங்களின் நோக்கம் ஆண் பெண் ஆடைகளை வடிவமைக்கும் தையற்கலையினை கற்றுக் கொள்ளும் ஆர்வமுள்ள எவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே ஆகும். என்.டி.டி.ஏ அமைப்பு உருவாக்கும் வருவாய் இந்த அமைப்பின் பணிகளுக்கே ஒதுக்கப்படும்.இதற்காக எங்களின் அமைப்பிற்கு 80G கோரியுள்ளோம். இந்த நிலை அமைப்பிற்கு கிடைக்கப்பெற்றலால் மேலும் துரிதமாக பல சேவைகளை வழங்கவிருக்கிறோம்.

வீட்டுமனைப்பிரிவு கட்டமைப்பு :

தகுதி பெற்ற தையல் கலைஞர்களுக்கு தாங்கள் பெயரில் வீட்டுமனை பதிவு சில வருடங்களுக்கு முன்னால் செய்யப்பட்டுள்ளது.

மனை பதிவு செய்யப்பட்ட தையற்கலைஞர்களுக்கென வீடு கட்டும் செயல்திட்டம் :

எங்களது சங்கம் வங்கி கடன் பெற தகுதி வாய்ந்த தையற்கலைஞர்கள் தங்கள் கனவு இல்லத்தை கட்ட வங்கி கடனுதவி பெற உதவிகளை செய்யும்

இந்தியாவிலேயே முதல் தையற்கலைஞர்கள் குடியிருப்புகளை அமைத்தல்

ஆம்!! இந்த முயற்சி முதன்முதலாக எங்களின் சங்கம் செய்து முன்மாதிரியாக விளங்கவிருப்பதில் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகிறோம். இந்த குடியிருப்பில் திருமண மண்டபம் அலுவலகம் பயிற்சி கூடம் கோவில் போன்றவற்றை அமைக்கவிருக்கிறோம். நீங்கள் எங்களிடம் பதிவுபெற்ற ஒரு தையற்கலைஞராக இருந்தால் மட்டுமே போதுமானது.

நீங்கள் எந்தவயதுடைய நபராக இருந்தாலும் சரி , வளர்ந்து வரும் டெயிலராக உங்களது திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவரா ? அல்லது உங்களது மகள் (அ) மகனின் திருமணத்தை நடத்த ஆயத்தம் செய்பவரா ?தங்களின் உபயோகத்திற்காக எங்களின் திருமண மண்டபத்தை இலவசமாக (NTTA வின்விதிமுறைகள்மற்றும்நிபந்தனைகளுக்குஉட்பட்டது) பதிவு செய்து கொள்ளலாம்.

தையற்கலைஞருக்கு கற்பித்தல் (அ) திறன் மேம்படுத்துதல் :

புதிதாக கற்க விரும்பும் தையற்கலை ஆர்வமுள்ளோருக்கு கற்பிப்போம். மேலும் ஏற்கனவே தையல் தொழில் செய்து வருவோர் அடுத்த நிலைக்கு உயர்வதற்கான திறன் மேம்படுத்தும் பயிற்சிகளை அளிக்கின்றோம்.

தையற்கலை பாடத்திட்டங்கள் :

தையற்கலையில் அனுபவம் வாய்ந்த தையற்கலைஞர்களை எங்கள் பயிற்சி பள்ளியின் ஆசிரியர்களாக நியமித்துள்ளோம். பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் அவரவர் கற்கும் திறனுக்கேற்றவாறு கவனம் செலுத்தி பயிற்சியளிக்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் எந்த நாளிலும் சேரலாம். ஆண்கள் மற்றும் மகளிருக்கென தனித்தனி வகுப்புகள் இயங்குகின்றன.

 • முழு முதல் மாஸ்டர் டெய்லருக்கான பாடத்திட்டம் - ஆண் மற்றும் பெண் ( மேம்பட்ட பாடத்திட்டம் மாஸ்டர் பாடத்திட்டம் 3 வருடங்கள் )
 • மகளிர் பேஷன் - தையல் பயிற்சி மட்டும் மேம்பட்ட மகளிர் பாடத்திட்டம் - வெட்டுதல் மற்றும் தையல் பயிற்சி – 2 வருடங்கள்.
 • ஆண்கள் உடை – மாஸ்டர் பேட்டர்ன்மேக்கர் ஆடை வடிவமைப்பு பயிற்சி – 2 வருடங்கள்
 • ஆண்கள் உடை மற்றும் பெண்கள் உடை தைப்பதற்கான வணிக டிப்ளோமா கல்விதிட்டம்.
 • ஆண்கள் உடை – அடிப்படை பயிற்சிக்கான பாடத்திட்டம் 150 நாட்கள் - இது ஒரு இலவச பயிற்சி பாடத்திட்டம் - ( மொத்த காலி இட எண்ணிக்கையின் உச்ச வரம்பினுக்கு உட்பட்டது )
 • மகளிர் உடை – அடிப்படை பயிற்சிக்கான பாடத்திட்டம் 150 நாட்கள் - இது ஒரு இலவச பயிற்சி பாடத்திட்டம் - (மொத்த காலி இட எண்ணிக்கையின் உச்சவரம்பினுக்கு உட்பட்டது.)
 • பவர் மெஷின் பாடத்திட்டம்.
 • A-Z தையற்கலை பயிற்சி.

சான்றிதழ் பெற்ற பட்டதாரி தையற்கலைஞர்கள்

இவர்கள் எங்களது பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றமையால் இவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை எங்களது பொறுப்பாக ஏற்றுக் கொண்டு அவர்களை எங்களின் பதிவு பெற்ற தையல் தொழில் செய்யும் தையற்கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்காக பரிந்துரை செய்யப்படும்.

கடை அமைப்பதற்கான உதவி

மேலும் சான்றிதழ் பெற்ற தகுதி வாய்ந்த பட்டதாரி தையற்கலைஞருக்கு அவர்களே தொழில் தொடங்கும் ஆர்வம் இருந்தால் கடை அமைத்ததிலிருந்து தையல் இயந்திரம் வாங்குவது வரையிலாக எல்லா உதவிகளும் செய்யப்படும். ஆர்வமுள்ள தையற்கலைஞர்களை எங்கள் அமைப்பினுக்கு நேரில் வந்து மேலும் விவரங்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

அரசாங்க ஆதரவு

மேலும் நிறைய தையற்கலைஞர்களுக்கு இந்த சேவைகளை விரிவுபடுத்த அரசாங்க உதவி மற்றும் சலுகைகளை பெற முயற்சி செய்து வருகிறோம்.