நவீன தையல் தொழிலாளர்கள் சங்கம்

  • English
  • தொலைபேசி: (+91) 93806-01635
  • மின்னஞ்சல்: Mailus@ntta.org.in

சங்க தலைவரின் பகிர்வு

News

சங்க தலைவரின் பகிர்வு :

பாலகோபாலாகிய நான் தையற்கலையில் பல வருடங்களகாக பணியாற்றி ATA-வின் சங்க தலைவரான பின்னர் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் திறமை மிக்க ஏழை மற்றும் எளிய தையற்கலைஞர்களுக்கு அவசியமான என்னாலான உதவியும் பல்வேறு அரசாங்க சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதற்கான கருவியாகவும் செயல்பட்டு வருகிறேன்.

  • நானும் மற்ற உறுப்பினர்களும் இணைந்து இந்த தையற்கலையினை ஒரு தொழிற்துறையாக ஏற்றம் பெற வேண்டிய தேவையினை முன்னிலைபடுத்தியதுடன் புதிய தையற்கலைஞர்களை ஊக்குவித்தும்ää அனுபவம் வாய்ந்த தையற்கலைஞர்களுக்கு தங்களது திறமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன்.
  • எங்களது சங்க ஆலோசனை கூட்டங்களில் எங்களிடம் உள்ள நிலத்தினை பயன்படுத்தி தையற்கலை சமூகத்திற்கு பிரத்யேகமாக “தையற்கலைஞர்கள் குடியிருப்புகளாக” அபிவிருத்தி செய்ய உள்ளோம்.
  • அண்மையில் என்னிடம் நடந்த நேர்காணலுக்கு பிறகு நானே ATA-விற்கு இணையாக ஒரு பெரிய அமைப்பினை தொடங்க வேண்டும் என்று உறுதியாக உணர்ந்தேன்.
  • அதற்காக இதுவரை எடுத்த முயற்சிகள் தொடர்பான நிகழ்வுகளை கீழ்காணும் பத்தியில் காணவும்.

நலிவுற்ற எங்கள் தொழிலை மேம்படுத்தவும் , எனது நீண்டநாள் கனவான தையற்கலைஞர் சமூகம் எல்லா வளமும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற நவீன தையல் தொழிலாளர்கள் அசோசியேசன்” , செப்டம்பர் மாதம் 2018ல் தொடங்கப்பட்டது .

எங்களது கிராமப்புற மற்றும் நகர்ப்புற தையற்தொழிலாளர் சமூகத்தின் சேவைக்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை சிறப்பாக்கவும் மாபெரும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ATA உடனான எமது அனுபவம் அந்த திறனுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. மேலும் எங்களுடன் சேரத் தயாராக இருக்கும் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த தையற்கலைஞர்களின் சிறந்த திறமையை வெளி கொண்டு வருவதற்கான நுட்பத்தையும் எங்களுக்கு அளித்துள்ளது.எங்களின் திட்டமான “புதிய தையற்கலைஞரை உருவாக்குதல் மற்றும் அனுபவம் வாய்ந்த தையற்கலைஞர் என்று பெயர் பெற்று விளங்குவோரின் திறன்களை மேம்பித்தல்” தையற் சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பிரதான திட்டமாகும்.

வேறு சில தையல் சங்கங்கள் தனிப்பட்ட தையற்கலைஞர்கள் மற்றும் நன்கு நிறுவப்பட்ட தையற்கலை நிறுவனங்கள் எங்களது பணிகளுக்கு ஆதரவு தெரிவித்ததோடுää உதவ தயாராக உள்ளதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

குறிப்பாக வசதிகள் உடனடியாக கிடைக்க முடியாத கிராமப்புற தையற் சமூகங்கள் பயன்பெறும் வகையில் இது ஒருங்கிணைக்கப்படும். இது பயனுள்ள மற்றும் திறமையான சேவைகளை வழங்குவதற்கும் அதற்கான வளங்களை ஒருங்கிணைக்கவும் பயன்படும்.இதன் மூலம் நிலையான தேசிய வளர்ச்சி இலக்குக்கு பங்களிப்பு செய்கிறது.

எங்களின் வழக்கமான தையல் முகாம் வளர்ந்து வரும் தையற்கலைஞர்களை அடையாளம் காண உதவுகிறது மற்றும் அவர்களுக்கு கல்வி உதவித்திட்டத்தையும்ää அத்திட்டத்தை வழங்குவதற்கு ஏற்ற உதவும் பயனாளிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதோடு தையற்கலைஞர்களின் வாழ்க்கை தரம் உயரவும் பங்களிக்கும்.

தையற்கலைஞர்களின் வருவாய் உயர்த்தும் முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்க சமூக உறுப்பினர்கள் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களது ATA உறுப்பினர்கள் புதிய சங்கத்திற்கு "NTTA" என்ற பெயரினை தேர்வு செய்ய காரணம் இந்த சங்கம் இந்தியாவிலேயே முதன்முதலாக தையற் வழிமுறைகளை எண்ணியலின் (டிஜிட்டல்) உதவியோடு நவீனப்படுத்தி ஒவ்வொரு தையற்கலைஞரும் உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களை எளிதில் அடையச் செய்வதே பிரதானமான நோக்கமாகும்.

எங்கள் தையற்கலைஞர்கள் சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டாளர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் நன்கொடையாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தித் துறைகளின் உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து தொடர்ச்சியான கருத்தாய்வு மற்றும் ஆதரவு இல்லாமல் எங்களது சாதனைகள் அனைத்துமே சாத்தியப்பட்டிருக்காது. எங்களின் இந்த சங்க வளர்ச்சி பணிகளுக்கு உங்களது நீடித்த ஆதரவினை தொடர வேண்டுகிறோம்.

நிறுவனர் மற்றும் தலைவர்


Mr. A. பாலா கோபால்