நவீன தையல் தொழிலாளர்கள் சங்கம்

  • English
  • தொலைபேசி: (+91) 93806-01635
  • மின்னஞ்சல்: Mailus@ntta.org.in

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. NTTA எதற்காக ?

அருமையான கேள்வி ! நான் பலவருடங்களாக ஒரு அசோசியேசனில் இருந்தேன். என்னிடம் உள்ள 4 (1/2 ) ஏக்கர் நிலத்தினை தையல் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்கென உபயோகபடுத்திக் கொள்ள பலமுறை கேட்டுகொண்டும், அதில் எந்தவொரு முன்னேற்றமும் நடக்காததனால் இந்த நவீன தையற்தொழிலாளர்கள் சங்கத்தினை தையற் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்கென ஆரம்பித்தேன்.

2. இதை ஆரம்பிப்பதற்க்கு போதுமான அனுபவம் உங்களின் உள்ளதா?

3. இந்த சங்கத்தினால் தையற்கலைஞர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

நான் தையற்தொழிலினை ஆரம்பித்த பொழுது " D " நிலைதையற் கலைஞனாக இருந்து ஒரு நல்ல ஆசிரியர் (குரு) அமைந்ததால் என்னால் இன்று A நிலை தையற்கலைஞனாக உருவாகமுடிந்தது. யான்பெற்ற நன்மை எல்லா தையற்கலைஞர்களும் பெற ஒரு தையற்கலை பயிற்சி / கல்வி கட்டமைப்பு உருவாக்குவதற்காகவும் இதை தொடங்கியுள்ளேன். நான் பேசன்டிசைன் படித்துள்ளதால் மற்றவர்களும் இது போன்ற தையற் தொடர்புடைய பல வகுப்புகள் அமைவதற்கு இது உதவும். இன்று பல தையற் கலைஞர்கள் பழைய முறை தையற் மெசின் பயன் பாட்டினையும், கையினால் எம்பிராய்டரி போடுவதையும் இன்றும் செய்து வருகின்றேன். இவர்களின் வேலை பழுவினால் நவீண தையற் மெசின் பயன் பாட்டினை கற்றுக் கொள்ளாமலேயே இருந்து வருகின்றனர். இவர்கள் எல்லோரையும் முன்னேற்ற கூடிய வாய்பாகவும் இது அமையும் என்று எதிர்பார்க்கிறேன். NTTA இதனை ஓரு தன்னார்வ முயற்சியாக தையற்கலை பயிற்சி வகுப்புகளும், திறன் மேம்பாட்டு வகுப்புகளும் எடுத்து நடத்த முடிவுசெய்துள்ளது.

4. தையல் தொழிலில் விஞ்ஞான வளர்ச்சி எவ்வாறு உள்ளது ? உங்கள் சங்கத்தின் பெயர் நவீன தையற் தொழிலாளர்கள் சங்கம் என்பதன் நோக்கம் என்ன ?

மற்ற எல்லா துறையிலையும் விஞ்ஞான வளர்ச்சி பெரிதாக நடக்கிறது. ஆனால் தையற் துறையில் அவ்வாறான வளர்ச்சி குறைவாகவே உள்ளது. A - தரவரி சைதையற் கலைஞர்கள் மட்டும் பயன்படுத்த கூடியதாக ஒரு கணினி, ஒரு பிரின்டர், இன்டர்ன்ட் அமைக்க முதலீடும் அதிகமாக உள்ளதால் இந்த விஞ்ஞான வளர்ச்சி குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் என் வாடிக்கையாளரின் வீட்டுக்காரரை சந்திக்க நேர்ந்தது. அவர் கணினி துறையில் இருப்பவர். எனக்கு இந்த விஷயத்தில் உதவுவதாக கூறினார். தையற் கலைஞருக்கான கைபேசி ஆப் ஒன்றினை வடிவமைக்கலாம் அது எளிதில் எல்லா தையற்கலைஞர்களும் பயன்படுத்தகூடியதாக, முதலீடும் குறைவாக அமையும் என்று யோசனை கூறினார். இது நல்ல யோசனையாக தோன்றியதால் நான் இருந்த அசோசியேசனில் தெரிவித்தேன். உறுப்பினர்கள் இதில் ஆர்வமாக இதில் இணைவதற்க்கு விருப்பம் தெரிவித்தனர். ஆனால் ஒப்பந்தம் ஏற்படுவதற்க்கு முன்பாக சங்கத்தின் மேலாண்மை பிரச்சனையினால் அந்தயோசனை சங்கத்தில் நீர்த்து போய்விட்டது. அதனால் இந்த யோசனையையும் NTTA எடுத்து செய்வதற்க்கு முடிவுசெய்துள்ளது.

5. NTTA எவ்வாறு கட்டமைக்கபட்டுள்ளது ?

அந்த கணினி துறையில் இருப்பவர் தொலைபேசி ஆப் மட்டுமல்லாமல் NTTA சங்கம் உருவாகவும் பெரிதும் உதவினார். அவர் மூலமாக சங்கத்திற்கு ஒரு ஆடிட்டரை அறிமுகபடுத்தினார் (அவர சங்க உருவாக்கத்திலும், சங்கத்திற்கான 80 G கிடைப்பதற்க்கும் பெரிதும் உதவிவருகிறார்). மேலும் ஆடிட்டர் மூலம் சங்கத்திற்கு ஒரு வக்கீலும் அமைந்தார் (அவர் சங்கத்திற்கான சட்டவிஷயங்களில் உதவிவருகிறார். மற்றுமொரு வாடிக்கையாளர் மூலம் NTTAவின் சங்க கட்டிடம் உருவாவதற்கு ஆலோசனை பெற கட்டிடஅமைப்பாளர் அறிமுகம் கிடைத்தது.

6. உங்கள் சங்க உருவாக்கத்தில் வாடிக்கையாளரின் பங்கு என்ன ?

என்னுடைய நாற்பதாண்டு கால அனுபவத்தில் என் தையற்பணியில் நிறைவு பெற்றவாடிக்கையாளர்களும், என் தன்மையான அணுகுமுறையினால் சம்பாதித்த வாடிக்கையாளர்களும் என் வயதிற்கும், என் படிப்பிற்கும் மேலான பல பணிகளை மேற்கொள்ளவிற்கும் முயற்ச்சிக்கும் ஊக்குவிக்கும் வகையில் பலவாறு உதவி வருகின்றனர். இவர்கள் எல்லோரின் பங்கும் உதவியும் இந்த NTTA உருவாக்கத்தில் பெரிய பங்கு வகிக்கிறது. இவர்கள் அனைவருக்கும் நான் கடமைபட்டுள்ளேன். இதுவே NTTA பணியினை முழுமையான நிறைவோடு செய்ய தூண்டு கோலாகிறது.

7. உங்களின் நிர்வாக கட்டமைப்பு எப்படிபட்டது ? எவ்வாறு அவர்கள் நிர்வகிக்கபடுகிறார்கள்?

NTTAவில் மகளிர் மட்டும் பணியாற்ற கூடிய அணி ஒன்று உள்ளது. நிர்வாக மேலாண்மை மற்றும் NTTAவின் ஏழு போர்ட் உறுப்பினர்கள், KPI - முக்கிய செயல்திறன் காட்டி இன்வழியில் நிர்வாகிக்கபடுவார்கள். இதன் வழியில் செயல்படாத உறுப்பினர்கள் இரண்டு (அ) மூன்று எச்சரிக்கைகளுக்கு பின் நீக்கப்பவார்கள் - NTTA- நவீண தையற்தொழிலாளர்கள் சங்கம் - இதில் சாதி, மத, இன, அரசியல் பிரிவினைகளோ , வேறுபாடுகளோ இராது. நாங்கள் மற்ற சங்கத்தினருடனான எந்த பந்தையத்திலும் ஆர்வம் காட்டவில்லை. வேறு எந்த சங்கத்தையும் விட நாங்கள்சிறந்தவர்கள் என்று நிருபிக்கவோ இல்லை. அடிப்படை திறன்களை கொண்ட எந்தவொரு தையற்காரரும் கடினமாக உழைக்க தயாராக இருந்தால் , இந்த தொழிலில் தாக்குப்பிடிக்கவும், தொழில்முறை போட்டியை வெல்லவும் நல்ல தொழில் நுட்ப அறிவும் கல்வியும் நாங்கள் வழங்குகிறோம்.

8. தையல் தொழிலின் தற்போதைய நிலைமை எவ்வாறு உள்ளது?

தையற்தொழிலில் ஜாம்பவானாக இருக்கக் கூடிய அமைப்புகள் இன்று வாடிக்கையாளரின் இல்லதிற்கே சென்று அவர்களை அளவெடுத்து மும்பையிலோ, குஜராத்திலோ இருக்கக்கூடிய தங்களின்தொழிற்சாலைக்கு அனுப்புகிறது. வாடிக்கையாளருக்கு அந்த தைத்த துணியில் சில மாற்றங்களோ / திருத்தங்களோ தேவைப்பட்டால் இந்த அமைப்பில் உள்ள, வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள உள்ளூர் தையற்கலைஞர்களை ஈடுபடுத்துகிறது. இதனால் பல உள்ளூர் தையற் கலைஞர்கள் காலப்போக்கில் மற்றங்கள் / தீருத்தல்கள் மட்டுமே செய்யகூடியஅளவில் தங்கள் திறமைகளை சுறுக்கி கொள்வார்கள் என்பது என்னுடைய சங்கத்தில் உள்ள மேலாண்மையினர் மற்றும் என்னுடைய கணிப்பு.

9. இதை களைய உங்களின் ஆலோசனை என்ன?

ஒவ்வொரு தையற்கலைஞரும் இந்த தையற்தொழிலில் அடிப்படை பயிற்சி மட்டுமல்லாது, பல்வேறு நவீன தையற்தொழில் சார்ந்த பயிற்சியினையும் கல்வியையும் எங்கள் சங்கத்தில் வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு நபரின் ஆர்வத்திற்கும் உட்பட்ட ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் எந்தவொரு மட்டத்திலிருந்தும் நிலை Aக்கு திறமையை அதிகரிக்க தையல்காரர்களுக்கு உதவுகிறது. டெக்னோ ஆர்வலராக மாறுவது குறித்து தையல்காரர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம், மேலும் கால மாற்றத்திற்கேற்ற நவீன பயிற்சிகளை பெற உதவுகிறோம். தையல் சமூகத்திற்கு நன்மை செய்வதற்கும் சேவை செய்வதற்கும் என்.டி.டி.ஏ-வில் சேர அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

10. முக்கிய செயல்திறன் காட்டி பற்றி விரிவாக கூறுங்கள். அது எவ்வாறு செயல்படுகிறது?

இந்த சங்கத்தின் செயல்பாடுகளை சீர்படுத்த நாங்கள் அவ்வபோது அந்த செயல்பாடுகளை தணிக்கை செய்கிறோம். நாங்கள் சங்கத்தின் பழைய உறுப்பினர்களை NTTAவில் தக்க வைத்து கொண்டுள்ளாம். நாங்கள் அவர்களுக்கான பணிகளை வழங்கியுள்ளோம். நாங்கள் எல்லா உறுப்பினர்களையும் சாலை நிகழ்ச்சிகள் , நிதிசேகரிப்பு , சங்கத்தின் ஒளியினை பரப்புதல், தையற்கலைஞர் காலனி உருவாக்கம் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு கற்ப்பித்தல் அவர்களின் நிபுணத்துவத்தைப்பகிர்ந்து கொள்ளுதல்போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட விழைந்துள்ளோம். சங்கத்தில் செயல்படும் மற்றும் செயல்படாத உறுப்பினர்களை அடையாளம்கண்டு, செயல்படாத உறுப்பினர்கள் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எங்களின் சங்ககட்டிட உருவாக்க பணிகளில் ஈடுபட எங்களுக்கு உறுப்பினர்களின் சீரிய பணிகள் தேவைப்படுகிறது. இதில் செயல்படாத சங்கத்தின் பொறுப்பில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து அந்த பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டு நன்கு செயல் படக்கூடிய துடிப்பான தையற்கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

11. யார்யார் சங்கத்தில் உறுப்பினர்களாகலாம்?

யார் வேண்டுமானாலும் எங்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆகலாம். அவர் தையற்கலைஞராக இருந்தால் எங்களின் நிர்வாக பாலிசியின் அடிப்படையில் பல நன்மைகள் அவருக்கு கிடைக்கும்.