நவீன தையல் தொழிலாளர்கள் சங்கம்

  • English
  • தொலைபேசி: (+91) 93806-01635
  • மின்னஞ்சல்: Mailus@ntta.org.in

NTTA நிகழ்வுகள்

ATA தொடங்கப்பட்ட நாள் 3/02/1999

லேமினேட் செய்யப்பட்ட கட்டுரை : 1999ல் அடையாறு தையற்கலை தொழிலாளர்கள் சங்கம் ATA அமைக்கப்பட்டது. இது உள்ளுர் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது.

திரு.டி.வி.எஸ் மணியால் ATAவின் உருவாக்கம் அறிவிக்கப்பட்டது.

திரு.கே.ஆர்.ராமசாமியின் நல்வாழ்த்துக்கள்.

2000 -- ஆண்டு விழா

எங்களின் பயணம் ஒரு மாற்றுத்திறனாளிக்கு தையல் இயந்திரம் நன்கொடை அளித்து அவர் அதைகொண்டு தன் தொழிலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில் இருந்து தொடங்கியது

திரு.மோகன்தாஸின் நல்வாழ்த்துக்கள் - 2000ம் ஆண்டு விழா

2001-- ஆண்டு விழா

2001ம் வருடத்து ஆண்டு விழா. நாங்கள் எங்களின் 110 உறுப்பினர்களுக்கு சூட்கேஸ்கள் பரிசளிப்பதற்காக சேமித்தோம். நாங்கள் தையற்கலைஞர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்ää இதர கல்வி திட்டங்கள் தையல் கலைஞர்கள் இல்லத்திருமணங்களுக்கு மணமக்களுக்கு பரிசளித்தல்ää ஆயட்காப்பீட்டுத்திட்டம் மற்றும் தையற்கலைஞர் மறைவிற்கு அவர் தம் குடும்பத்தினர்க்கு உதவி தொகை அளித்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

2002--ஆண்டு விழா

2002ம் வருடத்திய ஆண்டு விழா. விழாவின் தலைமை விருந்தினர் மதுரா கோட்ஸின் மேலாளர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் தையற்கலைஞர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான சுமார் 25 புலமைப்பரிசில் வழங்கப்பட்டது

2003--ஆண்டு விழா

2003ம் வருடத்தின் ஆண்டு விழா. முதன்மை விருந்தினராக திரு.டி.வி.எஸ்.மணி அவர்கள் வந்திருந்து விழாவினை சிறப்பித்தார்.

ஒரு தையற்கலைஞர் மறைவிற்கு அவரது மகளுக்கு ரூ.30000 நிதிஉதவி வழங்கப்பட்டது.

2004--ஆண்டு விழா

2004ம் வருடத்திய ஆண்டு விழா. விழாவின் பிரதான விருந்தினர்களாக தலைவர் திரு.ஆறுமுகம் திரு.டி.வி.எஸ்.மணி திரு.குமார் மற்றும் திரு.விஜயரங்கம் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர்.

நீரினில் பரவும் தொற்று நோய்கள் பெருகி இருந்த காலம் அது. ஆதலால் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மருந்துகள் விநியோகப்படுத்தப்பட்டன.

2005--ஆண்டு விழா

2005ம் வருடத்திய ஆண்டு விழா. விழாவின் பிரதான விருந்தினர்களாக தலைவர் திரு.ஆறுமுகம் திரு.டி.வி.எஸ்.மணி மற்றும் அமைச்சர் திரு.மைத்ரேயன் போன்றவர்கள் விழாவிற்கு வந்து சிறப்பித்தனர்.

பள்ளி கல்லூரியில் படிக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்ற தையற்கலைஞர் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியது.

ஒரு தையற்கலைஞருக்கு ஒரு மூன்று சக்கர வாகனம் நன்கொடையாக அளிக்கப்பட்டது.

2006--ஆண்டு விழா

2006ம் வருடத்திய ஆண்டு விழா. விழாவின் முதன்மை விருந்தினர் பணி ஓய்வு பெற்ற ஆணையாளர்.

தையற்கலைஞர் ஒருவரின் தகுதி வாய்ந்த மகளுக்கு ஆணையாளர் கல்வி உதவித் தொகை வழங்கினார்.

தட்டுகள் மின்விசிறிகள் போன்ற பொருட்கள் டி.கே.ஆர்.ஆர்.ராமசாமி மூலம் ஆதரவற்ற அனாதைகளுக்கு நன்கொடை அளிக்கப்பட்டது.

2007--ஆண்டு விழா

2007ம் வருடத்திய ஆண்டு விழா. பிரதான விருந்தினர் சாஸ்திரிநகர் மகளிர் நல சங்கத்தின் தலைவர் ஆவார்.

சில தையற்கலைஞர்களின் பிள்ளைகளுக்கு தலைவர் கல்லூரி படிப்பிற்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

சில தையற்கலைஞர்களின் பிள்ளைகளுக்கு பொருளாளர் கல்லூரி படிப்பிற்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

சில தையற்கலைஞர்களின் பிள்ளைகளுக்கு செயலாளர் கல்லூரி படிப்பிற்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

2008 -- ஆண்டு விழா

2008ம் வருடத்திய ஆண்டு விழா. விழாவின் முதன்மை விருந்தினர்களாக அமைச்சர் திரு.மைத்ரேயன் அவர்கள்ää காரப்பாக்கம் பஞ்சாயத்து போர்டின் தலைவர் திரு.என்.சுந்தர்ராம் அவர்கள் மற்றும் மதுராகோட்ஸின் பொது மேலாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்தனர்.

200 தையற்கலைஞர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

எல்.ஐ.சி.யின் ஆயுட்காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற வயது முதிர்ந்த தையற்கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. நாங்கள் இந்த விவகாரம் குறித்த ஒரு அறிக்கையினை அமைச்சர் தா.மா.அன்பரசுவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.

2009--ஆண்டு விழா

2009ம் வருடத்திய ஆண்டு விழா. எல்.ஐ.சி பொது மேலாளர் தலைமையில் விழா நடைபெற்றது.

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் 30 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தையற்கலைஞர்களின் பிள்ளைகள் ஆவர்.

100க்கும் அதிகமான உறுப்பினர்கள் நல்ல சலுகை விகிதம் கிடைக்கப்பெற்ற எல்.ஐ.சியின் ஆயுட்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தனர்.

2010--ஆண்டு விழா

2010ம் வருடத்திய ஆண்டு விழா. இது மூன்று தையற்கலைஞர்களின் 60ம்; ஆண்டு திருமண நாள் கொண்டாடிய ஒரு மகிழ்ச்சியான தருணம்.

பட்டுச்சேலைகள் வேட்டிகள் மற்றும் பழங்கள் இவர்களுக்கு விநியோகிப்பட்டன.

200க்கும் மேற்பட்ட தையற்கலைஞர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

அடுத்த ஆண்டிற்கான புலமைப்பரிசில் பட்டியல்கள் எடுக்கப்பட்டன.