நவீன தையல் தொழிலாளர்கள் சங்கம்

  • English
  • தொலைபேசி: (+91) 93806-01635
  • மின்னஞ்சல்: Mailus@ntta.org.in

கண்ணோட்டம்

தொலைநோக்கு பார்வை

எங்களது தொலைநோக்கு பார்வையினை மூன்று நிலைகளாக வகுத்துள்ளோம். முதலில் தையற்கல்வி வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி. . இரண்டாவதாக தையற்கலைஞர்களை ஒரு தொழில் முனைவோர் ஆக்க உதவுவது. மூன்றாவதாக திறமை வாய்ந்த தையற்கலைஞரை அடுத்த நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள உதவுவதும் ஆகும்.

எங்களது பணி இலக்குகள்

பிராந்தியத்தில் தையற்கலை சமூகத்தின் வாழ்க்கை முன்னேற்ற வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அனைத்து மக்களிடையே நல்லிணகத்தை உருவாக்கவும் மகிழ்ச்சியை அதிகரிப்பதிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். தையற்கலை சமுதாய உறுப்பினர்களை புதிய திறன்களை கற்பதற்கு மற்றும் அவர்களை ஒருங்கிணைப்பதற்கு உதவுவதன் மூலம் நாங்கள் அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் சுய மதிப்பீடு மற்றும் சேவை செய்வதற்கான முக்கியத்துவத்தை ஊக்குவிக்கிறோம். தற்போது தையற்கலைஞர் சமுதாயத்திற்கு பிரத்யேகமாக வாடகையின்றி உபயோகப்படுத்தக் கூடிய திருமண மண்டபம் , தையற்பள்ளி மற்றும் வழிபாட்டு கோவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

பாலகோபால் என்ற தையற்கலைஞரால் நிறுவப்பட்ட. இது ஒரு பொது நல அமைப்பு. தையற்கலைஞர்களின் நலனுக்காக பதிவு செய்யப்பட்டது. இது தையற்கலையில் பல சான்றிதழ் பயிற்சி திட்டங்களை வழங்குகிறது. திறமையான இளைஞர் இளைஞிகளை அல்லது சிறிதளவு தையல் பயிற்சியுடைய தையற்கலைஞர்களை அடையாளம் காணவும். பயிற்சி பெறவும் . அவர்கள் தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ஆதரவளிக்கவும் அடிப்படை இடைநிலை மற்றும் திறமைசார் தையற்பயிற்சியினை கற்பிக்கவும் நாங்கள் உத்தேசித்துள்ளோம். தையற்பயிற்சி மேற்கொண்ட தையற்கலைஞர்கள் நம்பிக்கையை பெறுவதும் மற்றும் அவர்கள் செய்யும் தையல் வேலையில் அவர்கள் பெருமிதம் கொள்வதுமே எங்களின் நோக்கம் ஆகும்.

யார் நாங்கள்

எங்கள் சங்க பணிகளில் வழிகாட்ட ஒரு சங்க அமைப்பின் தேவையை நாங்கள் உணர்ந்தபோது சரியான ஒரு ஆலோச அமைப்பினை அடையாளம் கண்டு அவரை அணுகி எங்கள் சங்கத்திற்கு ஆலோசக அமைப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். இலக்குகளை அடைய எங்களுக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டோம். அவர்கள் எங்களுக்கு முழுமையான பார்வையுடைய ஒரு தொலைநோக்கு திட்டத்தினை வடிவமைத்து கொடுத்தனர். அதன்மேல் முழு நம்பிக்கை வைத்து செயல்பட்டு இதோ உங்கள் முன்னால் ஒரு NPO ( தன்னார்வற்ற ஒரு தொண்டு நிறுவனமாக ) நிற்கிறோம். நாங்கள் உள்ளடங்கிய வாரிய உறுப்பினர்களால் அறிவுறுத்தப்பட்டு மேலும் 150 ஊழியர்களால் ஆதரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறோம். வாரியம் கொள்கை அளவிலான ஒட்டு மொத்த வழிகாட்டுதலை வழங்குகிறது. வாரியம் ஒப்புதல் அளித்த நடவடிக்கைகளை பொருளாளர் மற்றும் இயக்குநர் ஊழியர்களின் ஆதரவுடன் செயல்படுத்துகின்றனர். இயக்குநர் பல்வேறு திட்டங்களை திட்ட நிரல் மற்றும் 150 ஊழியர்களின் நெட்வொர்க்குடன் செயல்படுத்துகிறார்.

  • எங்களது குறிக்கோள் : பெருமையுடன் சிறந்து விளங்க வேண்டும்.
  • எங்களுடைய முக்கிய மதிப்பீடுகளாவன :நேர்மை கடின உழைப்பு பேரார்வம் கண்ணியம் அர்பணிப்பு மற்றும் நிகழ்கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு பொருந்துவதும் ஆகும். மேலும் ஒரு வளமான மற்றும் மகிழ்ச்சியான தையல் சமூகமாக வளருவதாகும்.

எங்களது செயல்பாடுகள்

தொலைதூர மற்றும் கிராமிய பகுதிகள் மட்டுமல்லாது நகர்புற பகுதிகளிலும் உள்ள ஆர்வமுடைய தையற்கலைஞர்களுக்கு கற்பித்தும் தேவைப்படும் தையற் சமூகத்திற்கான தங்களுக்கு சேவைகளையும் செய்கிறோம். எங்களது செயல்பாடுகள் பெரிய தேசிய முன்முயற்சிகளுக்கும் உள்ளூர் அடிமட்டத் தேவைகளுக்குமான இடைவெளிகளை இணைக்க உதவுகிறது. இது சமூக அணி திரட்டல் திறனை தட்டியெழுப்புதல் மற்றும் அதிகாரமளித்தல் போன்ற செயல்முறைகளை மையமாகக் கொண்டது.

  • மாணவர்களின் எண்ணிக்கையை தீர்மானித்தவுடன் அவர்களின் திறமைக்கேற்ற தையற்சான்றிதழ் பயிற்சி திட்டத்தின் கீழ் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களின் திறனை வளர்த்து கொள்ளக் கூடிய தொடர்புடைய தையற்கலை தொழில்நுட்பத்தில் பயிற்சியளிக்கப்படுவார்கள். இவை இரண்டினையும் வெற்றிகரமாக முடித்தவுடன் இரண்டிற்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் அவர்களின் வியாபாரத்தை கட்டமைக்க உதவுகிறோம். அவர்கள் தகுதி பெற்ற பிறகு அடுத்த கட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள நாங்கள் தொடர்ந்து உதவுவோம்.
  • எல்லா பயிற்சி திட்டங்களும் கால வரையறைகளுக்கும்ää தனிப்பட்ட தையற் கலைஞர்களின் ஆர்வத்திற்கும்ää அவர்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி திட்டத்தின் செயல் வரைமுறைகளுக்கும் உட்பட்டது.
  • இந்த பயிற்சி திட்டத்திற்கு தங்களது பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள அனைத்து தையற்கலைஞர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
  • வெற்றிகரமாக சான்றிதழ் பெற்ற பட்டதாரி தையற்கலைஞர்கள் எங்கள் தையல் உறுப்பினர்கள் மூலமாகவோ அல்லது எங்களின் கிளைகள் மூலமாகவோ வேலை வாய்ப்பினை பெறலாம். அல்லது அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கும் விருப்பம் இருந்தால் அந்த முயற்சிக்கு உதவியளிக்க தயாராக உள்ளோம். இட ஒதுக்கீட்டு எண்ணிக்கை உச்ச எண்ணிக்கையின் வரம்புக்கு உட்பட்டது