நவீன தையல் தொழிலாளர்கள் சங்கம்

உங்களை நவீன தையல் தொழிலாளர்கள் சங்கத்திற்கு வரவேற்கிறோம்

உங்களை எங்களது NGO ( இலாப நோக்கற்ற அமைப்பிற்கு ) வரவேற்கிறோம். எங்கள் பயணம் 1999ம் ஆண்டு அடையாறு தையற்கலை சங்கதத்திலிருந்து தொடங்கி இன்று வரை அடைந்துள்ள வளர்ச்சியை பற்றி குறிப்பிடுகிறோம் . NTTA அமைப்பு - தையற்கலைஞர்களின் நடைமுறை சிக்கல்களை கண்டறிந்துள்ளது. அதனால் அந்த சிக்கல்களை களைவதற்கும் மேலும் அது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதில் எல்லாவற்றிலும் மேலாக ஒட்டுமொத்த தையற்கலைஞர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாட்டிலும் எங்களது முழு கவனத்தை செலுத்தி வருகிறோம். இதில் பெண்கள் , குழந்தைகள், ஊனமுற்றவர்கள், வயதானோர் மற்றும் பொருளாதார வளம் குறைந்தவர்களுக்கென தனிப்பட்ட சலுகைகள் கிடைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கான முயற்சியாக அரசாங்க சலுகைகளை பெறுதல் , தையற் தொழிற்கல்வி மானிய விலையில் கற்பித்தல் மற்றும் தையற்கலைஞர்களுக்கென வீட்டு மனை ஒதுக்குதல் ஆகியவற்றை செய்து வருகிறோம்.

அக்கறை ஒரு பகிர்ந்தளித்தல்

நாங்கள் ஒத்த கருத்துள்ள உள்ள தனி நபர்கள் ஒன்றாக இணைத்து இந்த அகில இந்திய தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற பணியினில் ஈடுபட்டுள்ளோம். எங்களது முக்கிய கவனமாக திறமைவாய்ந்த திசை தெரியாமல் அல்லது பொருளாதார வளம் குறைந்த இளைஞர் இளைஞிகளுக்கு தையற்தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சியினை அளிப்பதே குறிக்கோள் ஆகும்.

உங்களது சிறு துளி உதவி - பெரு வெள்ளமாக மாற்றங்களை தரவல்லது

0 சதவீதத்திற்கு மேற்பட்ட எதுவும் எம் கண்களுக்கு பெரியதொரு நன்கொடை தொகையாக தெரியும்.

உங்களின் இந்த நன்கொடை எங்களது தன்னார்வ தொண்டு நிறுவன பணிகளுக்கான கட்டிடம் எழுப்புதல் தையற்கலைஞர்களின் பொதுநல பணிகளுக்கென ஒதுக்கப்படும். நீங்கள் அளிக்கும் நன்கொடை எங்களது தையற்கலைஞர்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.

தையற்கலைஞர்கள் குடியிருப்பு

நாங்கள் நான்கரை ஏக்கர் பரப்பளவு கொண்ட நில பகுதியை சொந்தமாக வைத்துள்ளோம். எங்களிடம் உள்ள இந்த நிலத்தினை பயன்படுத்தி தையற்கலைஞர் சமூகத்திற்கு பிரத்யேகமாக “தையற்கலைஞர்கள் குடியிருப்பாக” அபிவிருத்தி செய்வது எங்கள் குறிக்கோள்

இன்றே நன்கொடை அளித்திடுவீர்

எங்களை பற்றி

தொலைநோக்கு பார்வை

எங்களது தொலைநோக்கு பார்வையினை மூன்று நிலைகளாக வகுத்துள்ளோம். முதலில் தையற்கல்வி வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி. . இரண்டாவதாக தையற்கலைஞர்களை ஒரு தொழில் முனைவோர் ஆக்க உதவுவது. மூன்றாவதாக திறமை வாய்ந்த தையற்கலைஞரை அடுத்த நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள உதவுவதும் ஆகும்.

எங்களது பணி இலக்குகள்

பிராந்தியத்தில் தையற்கலை சமூகத்தின் வாழ்க்கை முன்னேற்ற வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அனைத்து மக்களிடையே நல்லிணகத்தை உருவாக்கவும் மகிழ்ச்சியை அதிகரிப்பதிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். தையற்கலை சமுதாய உறுப்பினர்களை புதிய திறன்களை கற்பதற்கு மற்றும் அவர்களை ஒருங்கிணைப்பதற்கு உதவுவதன் மூலம் நாங்கள் அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் சுய மதிப்பீடு மற்றும் சேவை செய்வதற்கான முக்கியத்துவத்தை ஊக்குவிக்கிறோம். தற்போது தையற்கலைஞர் சமுதாயத்திற்கு பிரத்யேகமாக வாடகையின்றி உபயோகப்படுத்தக் கூடிய திருமண மண்டபம் மற்றும் வழிபாட்டு கோவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

சங்க தலைவரின் பகிர்வு

பாலகோபாலாகிய நான் தையற்கலையில் பல வருடங்களகாக பணியாற்றி ATA-வின் சங்க தலைவரான பின்னர் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் திறமை மிக்க ஏழை மற்றும் எளிய தையற்கலைஞர்களுக்கு அவசியமான என்னாலான உதவியும் பல்வேறு அரசாங்க சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதற்கான கருவியாகவும் செயல்பட்டு வருகிறேன்.

  • நானும் மற்ற உறுப்பினர்களும் இணைந்து இந்த தையற்கலையினை ஒரு தொழிற்துறையாக ஏற்றம் பெற வேண்டிய தேவையினை முன்னிலைபடுத்தியதுடன் புதிய தையற்கலைஞர்களை ஊக்குவித்தும்ää அனுபவம் வாய்ந்த தையற்கலைஞர்களுக்கு தங்களது திறமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன்.
  • எங்களது சங்க ஆலோசனை கூட்டங்களில் எங்களிடம் உள்ள நிலத்தினை பயன்படுத்தி தையற்கலை சமூகத்திற்கு பிரத்யேகமாக “தையற்கலைஞர்கள் குடியிருப்புகளாக” அபிவிருத்தி செய்ய உள்ளோம்.
  • அண்மையில் என்னிடம் நடந்த நேர்காணலுக்கு பிறகு நானே ATA-விற்கு இணையாக ஒரு பெரிய அமைப்பினை தொடங்க வேண்டும் என்று உறுதியாக உணர்ந்தேன்.
  • எங்களது ATA உறுப்பினர்கள் புதிய சங்கத்திற்கு "NTTA" என்ற பெயரினை தேர்வு செய்ய காரணம் இந்த சங்கம் இந்தியாவிலேயே முதன்முதலாக தையற் வழிமுறைகளை எண்ணியலின் (டிஜிட்டல்) உதவியோடு நவீனப்படுத்தி ஒவ்வொரு தையற்கலைஞரும் உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களை எளிதில் அடையச் செய்வதே பிரதானமான நோக்கமாகும்.
  • இங்கு உறுப்பினர் சேர்க்கும் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்

நிர்வாக மேலாண்மை குழு உறுப்பினர்கள்

திரு. பாலகோபால்

நிறுவனதலைவர்

திரு. ஆர். கோதண்டன்

இயக்குநர்

திரு. எஸ். வி. பாபு

பொருளாளர்

தையற்கலைஞர் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வர


வேலையில்லாத இளைஞர்களுக்கு தையற்துறையில் ஒரு பிரகாசமான எதிர்காலம் அமைத்தல் என்பது நூறு சதவிகிதம் உங்களைப் போன்ற ஆதரவாளர்களால் நடத்திக் காட்ட முடியும்.


எங்களின் மதிப்பீடுகள் மற்றும் எண்ணத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு தனி நபராகவோää நிறுவனமாகவோ எங்கள் அமைப்பிற்கு நிதி உதவி செய்வதில் பெருமை கொள்ளுங்கள்.


கற்றல் - கற்பித்தல் - அபிவிருத்தி – நிபுணத்துவம் அடைதல் - தொழில் அதிபராக முன்னேறுதல்.

0

குழு உறுப்பினர்கள்

0+

வென்ற விருதுகள்

0+

அனுபவம் வாய்ந்தவர்கள்

0

நிரவேற்றபட்ட செயல்திட்டங்கள்

எங்களுடன் இணைந்து ஒரு தையற்கலைஞரின் எதிர்காலத்தை மேம்படுத்துங்கள்